ரஜினிகாந்த் அரசியலுக்கு வர மாட்டார்: பிரபல எண்கணித ஜோதிடரின் கணிப்பு

புதன், 11 மார்ச் 2020 (08:21 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் கட்சி தொடங்குவது குறித்த ஏற்பாடுகள் அனைத்தையும் செய்து முடித்துள்ள நிலையில் விரைவில் அவர் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து அவர் மாவட்டச் செயலாளர்களையும் இதுகுறித்து அவர் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்
 
இந்த நிலையில் திடீரென ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வாய்ப்பே இல்லை என்றும் அவர் அரசியல் கட்சி தொடங்க மாட்டார் என்றும் எண் கணித ஜோதிடர் ஒருவர் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்தின் பிறந்த தேதி, ரஜினிகாந்த் பெயரில் கூட்டுத்தொகை மற்றும் அவரது எண்கணிதம் ஆகிவற்றை கணித்துக் கூறியுள்ள பிரபல எண் கணித ஜோதிடர் ஒருவர், ‘ ரஜினிகாந்த் அரசியலுக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பே வந்திருக்க வேண்டும் என்றும் இனிமேல் அதாவது 69 வயதில் அவர் அரசியலுக்கு வருவது சாத்தியமில்லை என்றும் கூறியுள்ளார்
 
மேலும் ரஜினிகாந்தின் எண்கணித ஜோதிடப்படி அவர் இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்பே இல்லை என்றும் அதன் பின்னரும் வாய்ப்புகள் மிகக்குறைவு என்றும் இதனால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்ற எண்ணம் யாருக்கும் ஏற்பட வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
கட்சி ஆரம்பிப்பதற்கான 90 சதவீத பணிகளை முடித்துவிட்டதாக ரஜினிகாந்த் சமீபத்தில் பேட்டியளித்த நிலையில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வாய்ப்பே இல்லை என எண் கணித ஜோதிடர் ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்