சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக சென்னையில் கடந்த மூன்று நாட்களாக தினசரி இரவில் மழை பெய்து வருகிறது என்பதும் இதனால் சென்னை நகரமே குளிர்ச்சியாக மாறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.