கொரோனா பாதிப்பால், தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.
கோவை மாவட்டத்தில், வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை பெய்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில், வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்துள்ளது.
மதுரையில் மேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.
தேனி மாவட்டத்தில், கம்பம் பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது.திருவாரூர் மாவட்டத்தில், மன்னார்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில்மழை பெய்துகொண்டுள்ளது