தமிழகத்தில் ஊரடங்கில் பயணத்திற்கு அனுமதி உண்டா ?

சனி, 8 மே 2021 (09:01 IST)
மூழு ஊரடங்கு காலத்தில்,  மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையிலான தனியார், அரசுப் பேருந்து போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 
 
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நேற்று 26,000 தாண்டி உள்ள நிலையில் கொரோனா வைரஸில் கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகள் அல்லது முழு ஊரடங்கு விதிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வந்தது. 
 
அந்த வகையில் நேற்று முக ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்றதை தொடர்ந்து தமிழகத்தில் மே 24 வரை, அதாவது மே 10 ஆம் தேதி முதல் (வரும் திங்கட்கிழமை) மே 24 தேதி வரை முழு ஊரடங்கு அமலபடுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 
 
மே 10 ஆம் தேதி காலை 4 மணி முதல் 24 ஆம் தேதி காலை 4 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். இந்த மூழு ஊரடங்கு காலத்தில்,  மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையிலான தனியார், அரசுப் பேருந்து போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும், வாடகை டாக்சி, ஆட்டோக்கள் ஆகியவை இயங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பணிக்கு செல்வோர் உரிய ஆவணங்களுடன் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்