’’தல அஜித்-ன் ரசிகர்களுக்கான இட ஒதுக்கீடு’’ ..வைரலாகும் கடிதம் !

வெள்ளி, 7 மே 2021 (18:28 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தை போனி கபூர் பிரமாண்டமான முறையில் தயாரித்துவருகிறார். தற்போது கொரொனா இரண்டாம் அலை காலக்கட்டம் என்பதால் அப்டேட் வரத் தாமதமாகிறது. இதை அதிகாரப்பூர்வமாக படத்தயாரிப்பாளர் அறிவித்துவிட்டார்.

இந்நிலையில், இன்று தல அஜித் ரசிகர்கள் ஒரு  கடிதம் எழுதியுள்ளனர். இது இணையதளத்தில் வைரலாகிவருகிறது.

இன்று  தமிழகத்தின் புதிய  முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் கோரிக்கை வைப்பதுபோன்று உள்ளது.  அதில் , தமிழகத்தில் உள்ள 50 கோடி தல ரசிகர்களுக்கான இட ஒதுக்கீட்டை நீங்கள் பெற்றுத்தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இப்படிக்கு அகில இந்திய முரட்டுத் தல -மை கழகம் எனத் தெரிவித்துள்ளனர்.
 
இது அஜித்குமார் கவனத்திற்கு சென்றால் அவர் மீண்டும் ரசிகர்களிக்கு எச்சரிப்பார் எனத் தெரிகிறது.

Congratulations and our request to Tamilnadu CM. M.K.Stalin.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்