சென்னை அண்ணா சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருக்கும்போது, ஒரு இளைஞர் திடீரென்று நடுரோட்டுக்கு வந்து சாலையில் படுத்து உருண்டு புரண்டார். அதைப் பார்த்த காவலர் அவரை ஓரமாகக் கொண்டு வர முயற்சித்தார். ஆனால் அவர் மறுத்தார்.
பின்னர் என்ன வேண்டும் என போலீஸார் அவரிடம் கேட்டபோது, தனக்கு பரோட்டாவும் வறுத்த கறியும் வேண்டுமென அவர் கூறியுள்ளார். அதைக் கேட்டகாவலர் தான் வாங்கித் தருவதாக கூறிய பின் அவர் சாலியில் ஓரமாக சென்று உட்கார்ந்து கொண்டார்.