தனியார் கல்லூரிகள் தவணையாக கட்டணம் வசூலிக்கலாம்! – தமிழக அரசு விளக்கம்!

வியாழன், 9 ஜூலை 2020 (12:18 IST)
கொரோனா காரணமாக தமிழகம் முழுவதும் கல்லூரிகள் இயங்காமல் உள்ள நிலையில் கல்வி கட்டணம் வசூலிப்பது குறித்து தமிழக அரசு நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடந்த மார்ச் மாதம் முதலாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மறுபடி எப்போது திறக்கப்படும் என்பது அறிவிக்கப்படாத நிலையில் பள்ளி, கல்லூரி கட்டணங்களை வசூல் செய்ய தமிழக அரசு தடை விதித்திருந்தது. இது தொடர்பாக தமிழக தனியார் கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்பு நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தது.

இதுகுறித்த விசாரணையில் பதில் அளித்த தமிழக அரசு தனியார் கல்வி நிறுவனங்கள் கல்வி கட்டணத்தை தவணை முறையில் வசூலிக்க அனுமதி அளிக்க முடிவு செய்திருந்ததாக கூறியுள்ளது. அதன்படி 2020ம் ஆண்டில் ஆகஸ்டு, டிசம்பர் என இரண்டு தவணைகளிலும், 2021ம் ஆண்டில் மார்ச் மாதத்தில் மூன்றாவது தவணையும் வசூலிக்க அனுமதிக்கப்படுவதாய் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்த நெறிமுறைகளுடன் கூடிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்