ரஜினி எனும் அம்பை ஏவியது யார்? பிரேமலதா கேள்வி!

சனி, 25 ஜனவரி 2020 (13:51 IST)
பெரியாரைப் பற்றி துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பேசியிருக்க வேண்டிய அவசியம் இல்லை என பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார். 
 
ரஜினிகாந்த் துக்ளக் ஆண்டு விழாவில் பெரியார் குறித்து பேசியது சர்ச்சையை கிளப்பியது. இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என திராவிட விடுதலை கழகத்தினர் கூறி வந்த நிலையில், தான் மன்னிப்பு கேட்க முடியாது என ரஜினிகாந்த் தெரிவித்தார். 
 
இந்நிலையில் இது குறித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்திடம் கேட்க்கப்பட்டது. அதற்கு அவர் பின்வருமாரு பதில் அளித்தார், பெரியாரைப் பற்றி 'துக்ளக்' விழாவில் ரஜினிகாந்த் பேசியிருக்க வேண்டிய அவசியம் இல்லை.
 
எதையும் யோசித்து பேசக்கூடிய ரஜினிகாந்த் இந்த கருத்தை பேசுகிறார் என்றால் அவரை வேறு யாரோ இயக்குகிறார்கள். ரஜினி வெறும் அம்பு தான். அவரை ஏவியது யார் என கேள்வி எழுப்பியுள்ளார். 
 
இதற்கு முன்னர் அமைச்சர் செல்லூர் ராஜூவும், ரஜினி எப்போதும் நிதானமாக பேசுபவர். ஆனால் இந்த விஷயத்தில் அவரை யாரோ தவறாக வழி நடத்துகின்றனர் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்