பாஜக எங்களை அச்சுறுத்தியது, ஆனாலும் தைரியமான முடிவெடுத்தோம்: பிரேமலதா விஜயகாந்த்

Mahendran

வியாழன், 4 ஏப்ரல் 2024 (11:30 IST)
பாஜக எங்களை கூட்டணிக்கு வரச் சொல்லி அச்சுறுத்தியது என்றும் ஆனாலும் நாங்கள் தைரியமாக அதிமுக கூட்டணியில் இணைய முடிவெடுத்தோம் என்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தேமுதிக கடைசி வரை எந்த கூட்டணியில் இணையும் என்பது சஸ்பென்சாக இருந்த நிலையில் திடீரென அதிமுக கூட்டணியில் இணைந்தது என்பது தெரிந்தது. இந்த நிலையில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தற்போது தமிழக முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்து வரும் நிலையில் அவர் பொன்னேரியில் நடந்த தேர்தல் பரப்புரையில் பாஜக மீது குற்றம் சாட்டியுள்ளார் 
 
அதிமுகவோடு நாங்கள் கூட்டணி வைக்கக்கூடாது என்று பாஜக தரப்பிலிருந்து தொடர்ந்து எங்களுக்கு நிர்ப்பந்தம் ஏற்பட்டது என்பதும் எங்கள் வங்கி கணக்கை முடக்கியதாகவும் எங்களை அச்சுறுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார் 
 
ஆனால் அதற்கெல்லாம் அஞ்சாமல் ஜெயலலிதா போல் தைரியமாக முடிவெடுத்து அதிமுகவுடன் கூட்டணி அமைத்தேன் என்று அவர் பிரேமலதா அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்