தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் ஒருபக்கம் கட்சி பிரமுகர்கள் கட்சி விட்டு கட்சி தாவி வரும் நிலையில், மற்றொரு புறம் கூட்டணி தொடர்பான விவாதங்களும் எழுந்துள்ளன. இந்நிலையில் பாஜக கூட்டணி அமைக்கும் கட்சியே ஆட்சியமைக்கும் என்று பாஜகவினர் கூறி வருகின்றனர்.
பாஜக பிரமுகர்கள் பல்வேறு கருத்துகளை சொல்லி வந்தாலும் பாஜக தலைவர் எல்.முருகன் இதுபற்றி எதுவும் சொல்லவில்லையே என கேஷுவலாக கடந்து செல்கிறார்கள் அதிமுக பிரபலங்கள். இந்நிலையில் விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி அளிக்க வேண்டும் என பேசியிருந்த பொன்.ராதாகிருஷ்ணன் “தமிழகத்தில் இனி பாஜக அங்கம் வகிக்கும் ஆட்சிதான் நடைபெறும். ஆனால் அது எந்த கட்சியுடனும் இருக்கலாம்” என கூறியுள்ளார்.