சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக, திமுகவை விட குறைந்த இடங்களையே கைப்பற்றியது. ஆனால் அதிமுக கூட்டணி உள்ள பாமக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இடங்களை எதிர்ப்பார்த்ததை விட நல்ல வெற்றி விகிதத்தை பதிவு செய்தது.
ஆனால், தங்களை கறிவேப்பிலையாக அதிமுக பயன்படுத்துவதாக் பாமகவினர் உணர்கின்றன போலும். ஆம், பாமகவிற்கு உரிய அங்கீகாரத்தை அதிமுக அளிக்கவில்லை என கட்சிக்குள் பேச்சுக்கள் எழுந்துள்ளது. அதிலும் சில பாமகவினர் மொத்தமாக அதிமுவின் பக்கம் சாய்ந்துவிட்டதாக தெரிகிறது.
தொடர்ந்து நடைபெற உள்ள 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல் பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங் களில் பாமக வலுவாக உள்ளது. எனவே இந்த இடங்களில் கணிசமான இடங்களை பெற பாமக கணக்கு போட்டுள்ளதாக தெரிகிறது.
எனவே, கட்சிக்காக உழைக்காமல் அதிமுகவிற்கு சலாம் போடுவதையே வேலையாக வைத்துள்ள சிலரை கண்காணித்து களையெடுக்க பாமக தலைமை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. மேலும், இளைஞர்களை கட்சிக்குள் கொண்டுவரவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.