கோவை மாவட்டம் ஆனைகட்டி சுற்று வட்டார பகுதிகளான தும்மனூர், செம்புகண்டி, ஜம்புகண்டி போன்ற 5 மலை கிராமங்களில் உள்ள நூற்றுக் கணக்கான மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
நகர் பகுதியில் விநாயகர் சதுர்த்தியின் போது விநாயகர் வைத்து வழிபாடு நடத்தி கொண்டாடுவதை போன்று மலை கிராமங்களில் நாங்களும் விநாயகரை வைத்து வழிபாடு நடத்தி கொண்டாட முடிவு செய்து உள்ளனர்.இது குறித்து தடாகம் காவல் நிலையத்தில் அனுமதி கேட்டு மனு அளித்தனர். இந்நிலையில் காவல் துறையினர் புதிதாக விநாயகர் வைத்து வழிபட உரிய அனுமதி பெற்ற பின்பு நடத்த வேண்டும் என அறிவுறுத்தினர்.