பெருங்குடியில் பொட்டலமாக்கப்பட்ட இளம்பெண்: கணவனை சுற்றி வளைத்த போலீஸார்

புதன், 6 பிப்ரவரி 2019 (08:36 IST)
சென்னை பெருங்குடியில் கைப்பற்றப்பட்ட பெண்ணின் கை கால்கள் குறித்து எந்த துப்பும் கிடைக்காதிருந்த நிலையில் தற்போது போலீஸார் அந்த பெண்ணின் கணவரை கண்டுபிடித்துள்ளனர்.
 
கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் சென்னை பெருங்குடி குப்பைக்கிடங்கில் இளம்பெண் ஒருவரது இரண்டு கால்கள் மற்றும் ஒரு கை வெட்டப்பட்ட நிலையில் ஒரு பையில் கிடந்தது. இதனைப் பார்த்து அதிர்ந்துபோன அங்கிருந்தவர்கள் இதுகுறித்து புகார் அளிக்க போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.
 
ஆனால் போலீஸார் குற்றவாளியை நெருங்க முடியாமல் திணறி வந்தனர். அந்த பெண் வேறு மாநிலத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என கருதி கேரள, கர்நாடக மாநிலங்களில் காணாமல் போன பெண்கள் குறித்த தகவலை தரும்படி அந்தந்த மாநில போலீஸிடம் உதவியை அணுகினர்.
 
இந்நிலையில் இரண்டு வார தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் போலீஸார் அந்த பெண்ணின் கணவரை சுற்றி வளைத்தனர். அந்த பெண் தூத்துக்குடியை சேர்ந்தவர் ஆவார். அவர் சென்னை ஜாபர்கான்பேட்டையில் கணவர் ராமகிருஷ்ணனுடன் வசித்து வந்திருக்கிறார்.
 
போலீஸார் ராமகிருஷ்ணனை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்