விமான நிலையத்தில் சரியான பரிசோதனை செய்யப்பட்டிருந்தால் கொரோனா பாதித்த அந்த பயணி எப்படி வெளியேறி சென்றிருக்க முடியும் என சமூக வலைதளங்களில் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு விமானங்களில் வருபவர்களை மட்டுமே சோதிப்பதாகவும், உள்நாட்டு விமானங்களில் வருபவர்களை சோதிப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பயணி ஒருவர் ”சென்னை விமான நிலையத்தில் முறையான கொரோனா பரிசோதனைகள் நடைபெறவில்லை. வரும் பயணிகளை கூட்டமாக ஒரு இடத்தில் கூட செய்து, சில விண்ணப்பங்களை மட்டும் பூர்த்தி செய்து வாங்கி கொண்டு அனுப்பி விடுகிறார்கள்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.