ஆந்திர போலீஸை மரத்தில் கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த மக்கள்
புதன், 17 அக்டோபர் 2018 (10:40 IST)
வேலூரில் திருடனை பிடிக்க மஃப்டியில் வந்த ஆந்திர போலீஸை மக்கள் மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் இளவன் தோப்பை சேர்ந்தவன் ராமக்கிருஷ்ணன். இவன் செம்மரம் வெட்டுவதற்கு ஆட்களை அனுப்பும் புரோக்கர் ஆவான். இவன் மீது ஆந்திராவில் 45 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. இவனை பிடிக்க ஆந்திர போலீஸார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
இவன் வேலூரில் பதுங்கியிருப்பதாக ஆந்திர போலீஸுக்கு தகவல் கிடைக்கவே, வேலூருக்கு மஃப்டியில் விரைந்த காவல் துறையினர், ராமக்கிருஷ்ணனை கைது செய்தனர். அப்போது அப்பகுதி மக்கள், போலீசாரை கொள்ளையர்கள் என நினைத்து அவர்களை, மரத்தில் கட்டி தர்ம அடி கொடுத்தனர்.
இந்த கேப்பை பயன்படுத்தி எஸ்கேப் ஆக பார்த்த ராமக்கிருஷ்ணனை ரத்தினகிரி போலீஸார் மடக்கிப்பிடித்தனர். ரத்தினகிரி போலீசார் மக்கள் பிடியில் இருந்த ஆந்திர போலீஸரை மீட்டு அவர்களிடம் ராமகிருஷ்ணனை ஒப்படைத்தனர். பின்னர் ஆந்திர போலீஸ் திருடன் ராமக்கிருஷ்ணனை ஆந்திராவிற்கு அழைத்து சென்றனர்.