பிரதமரை சந்திக்க தனித்தனியாக நேரம் கேட்ட ஓபிஎஸ்-ஈபிஎஸ்: அனுமதி கிடைக்குமா?
வியாழன், 6 ஏப்ரல் 2023 (18:28 IST)
பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகை தரும் போது அவரை தனித்தனியாக சந்திக்க ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் நேரம் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரதமர் மோடி வரும் 9ஆம் தேதி தமிழகத்திற்கு வருகை தர உள்ளார் என்பதும் அவர் முதுமலை செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமரின் வருகையை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக காவல்துறை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பிரதமர் தமிழ்நாடு வரும்போது எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் ஆகிய இருவரும் அவரை சந்திக்க தனித்தனியாக நேரம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
தற்போது வரை இருவருக்கும் பிரதமரை சந்திக்க நேரம் கொடுக்கப்படவில்லை என்றாலும் ஒரு சில நிமிடங்கள் தனித்தனியே சந்திக்க நேரம் வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.