கமல்ஹாசன் கட்சி தொடங்கும் முன்பு வரை திராவிட ஆதரவாளராகவே தன்னை அடையாளப்படுத்தி வந்தார். அவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி மீது தனி மரியாதையும் வைத்திருந்தார். ஸ்டாலினும் கமலும் அப்போதெல்லாம் நெருங்கிப் பழகி வந்தனர்.ஆனால் கமல் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சி ஆரம்பித்த பின்னர் இருவரும் ஒருவர் மீது ஒருவர் கடும் விமர்சனங்களை அடுக்கினர்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகிவரும் திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள்,மதிமுக, கம்யூனிஸ்டுகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் உள்ளன. இதில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்க்கவும் காங்கிரஸ் விரும்புவதாக பேச்சு எழுந்தது. இதற்கான முயற்சியில் தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ்அழகிரி ஈடுபட்டுள்ளார்.