தமிழக பட்ஜெட்: பட்டியல் போட்டு கேள்வி கேட்கும் கமல்!

சனி, 9 பிப்ரவரி 2019 (20:38 IST)
தமிழக பட்ஜெட் நேற்று சட்டப்பேரவையில் நேற்று துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
 
இந்த பட்ஜெட்டில் மின்சார பேருந்து இயக்கம், விவசாயிகளுக்கு பயிர் கடன், அத்தி கடவு அவினாசி திட்டம், ராமேஸ்வரத்தில் அப்துல்கலாம் பெயரில் கல்லூரி உள்பட பல்வேறு அறிவிப்புகள் இருந்தது. 
 
இந்த பட்ஜெட் குறித்து மக்கள் நீதிமய்யம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுளளது. அந்த பதிவில் தமிழக பட்ஜெட் 2019-20 நிதிநிலை அறிக்கை குறித்து ஒரு சிறிய ஆய்வுக்குப் பிறகு மக்கள் நீதி மய்ய கருத்து’ எனக் குறிப்பிட்டு வெளியிட்டுள்ளார்கள்.
 
அந்த பதிவில், "இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இந்த நிதி நிலை அறிக்கை அரசால் ஏற்படுத்தப்பட்ட பேரிடர். விவசாயிகள், இளைஞர்கள் மீனவர்களுக்குச் சிறப்பான வளர்ச்சி திட்டம் எதுவும் இல்லை. சென்ற வருடம் அறிவித்த திட்டங்களின் தற்போதைய நிலை என்னவென்று அறிக்கை தாக்கல் செய்யாத நிலையில், மீண்டும் அதே திட்டங்கள் தூசி தட்டப்பட்டு  அறிவிக்கப்படுவதுபோல் தோற்றமளிக்கிறது" என்று கூறப்பட்டுள்ளது.

தமிழக பட்ஜெட் 2019-2020. நிதிநிலை அறிக்கை குறித்து ஒரு சிற்றாய்வுக்குப் பின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கருத்து. pic.twitter.com/84ucA1Abyi

— Kamal Haasan (@ikamalhaasan) February 9, 2019

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்