நெல்லை மாவட்டத்தில் உள்ள பணகுடி என்ற பகுதிக்கு அருகே கோரி காலணி என்ற பகுதி உள்ளது. அங்கு கணவரை இழந்த தனியாக வாழும் 68 வயது மூதாட்டி ஒருவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் மூதாட்டி வீட்டின் ஓட்டை பிரித்து இளைஞர் ஒருவர் வீட்டிற்குள் குதித்து அந்த மூதாட்டியிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.