தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே உள்ளதால் குடியரசுத் தலைவர் ஆட்சி தொடர்கிறது. அதே சமயம் கூட்டணி கட்சிகள் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றனர். ஆம், அதன்படி பாஜக, அதிமுக, என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி இன்று மாலைக்குள் இறுதி செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 14 தொகுதிகள் என்.ஆர். காங்கிரஸ், 10 தொகுதிகள் பாஜக, அதிமுக 6 தொகுதிகள் என பேசப்பட்டது. ஆனால் இதற்கு என்.ஆர். காங்கிரஸ் ஒப்புக்கொள்ளாததால் தற்போது என்.ஆர்.காங்கிரசுக்கு 16 தொகுதிகளும், பா.ஜ.க, அதிமுகவுக்கு 14 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க இடையே தொகுதி பங்கீடு நிறைவடைந்து கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.