ராகுல் காந்தி வந்த ஹெலிகாப்டரில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை.. நீலகிரியில் பரபரப்பு

Mahendran

திங்கள், 15 ஏப்ரல் 2024 (10:44 IST)
நீலகிரியில் ராகுல் காந்தி வந்த ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வயநாடு தொகுதியில் பிரசாரம் மேற்கொள்ள செல்லும் வழியில் நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதிக்கு ஹெலிகாப்டர் மூலம் ராகுல் காந்தி வந்தடைந்தார். அப்போது ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து தேவாலயம் செல்லும் ராகுல் காந்தி, அங்கு தேயிலை தோட்ட தொழிலாளர்களுடன் கலந்துரையாடுகிறார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் நீலகிரியில் ராகுல் காந்தி வந்த ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் திடீரென சோதனை செய்ததாகவும் சோதனைக்கு பின்னர் பணம் நகை உள்பட எந்த பொருளும் ஹெலிகாப்டரில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அமைச்சர்களின் கார்கள் எதிர்க்கட்சி தலைவர்களின் கார்கள் சோதனை செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது ராகுல் காந்தி வந்த ஹெலிகாப்டரும் சோதனை செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்