'என் அண்ணன்' மு.க ஸ்டாலின்..! ராகுல் காந்தி நெகிழ்ச்சி..!!

Senthil Velan

வெள்ளி, 12 ஏப்ரல் 2024 (21:15 IST)
தேர்தல் பத்திரங்கள் மூலம் பாரதிய ஜனதா பல கோடி ஊழல் செய்துள்ளதாகவும், இது பாஜக செய்த ஊழலின் சிறுபகுதி தான் எனவும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

கோவை மாவட்டம், செட்டிபாளையத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க ஸ்டாலினும், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியும் பிரச்சாரம் மேற்கொண்டனர். அப்போது பேசிய ராகுல் காந்தி, மு.க ஸ்டாலினை என் அண்ணன் என்று அழைத்தார். நான் வேறு எந்த அரசியல்வாதியும் இப்படி அழைப்பதில்லை என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
 
நீட் தேர்வு தமிழக இளைஞர்களுக்கு பிரச்சினையாக உள்ளது என்றார்.  பிரதமருக்கு தோசை பிடிக்குமா? வடை பிடிக்குமா? என்பது பிரச்சனை அல்ல,  தமிழ் மொழியை பிடிக்குமா? என்பது தான் பிரச்சனையே என்றும் தமிழ்நாட்டுக்கும் நாட்டுக்கும் என்ன செய்கிறீர்கள் என்பது தான் எங்கள் பிரச்சினையே என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.

ஏழை மக்களுக்காக பாஜக ஆட்சியில் எதுவும் செய்யப்படவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார். 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டில் வேலைவாய்ப்பு திண்டாட்டம் அதிகரித்துள்ளது என்றும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 30 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். மேலும் வேலைவாய்ப்பு பழகுர் பயிற்சி பெறுபவர்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
 
20 கோடி மக்களிடம் இருக்க வேண்டிய பணத்தை 20 பேர் மட்டுமே வைத்துள்ளதாக குற்றம் சாட்டிய ராகுல் காந்தி,  நடந்து கொண்டிருப்பது சாதாரண தேர்தல் அல்ல, இது சித்தாந்த போர் என்று கூறினார். தேர்தல் பத்திரங்கள் மூலம் பாரதிய ஜனதா பல கோடி ஊழல் செய்துள்ளதாகவும்,  இது பாஜக ஊழலின் சிறுபகுதி தான் எனவும் அவர் விமர்சித்தார்.
 
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாய பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை தரப்படும்,  ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும், வேலைவாய்ப்பு அதிகரிக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை ராகுல் காந்தி அளித்தார். இந்தியா ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு சொந்தமானதல்ல என்றும் முக்கிய அமைப்புகளில் அதன் தாக்கம் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 

ALSO READ: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரில் பறக்கும் படை சோதனை..! என்ன சிக்கியது..?
 
ஆர்.எஸ்.எஸ் தலையீடு இந்திய ஒன்றியம் மீது தொடுக்கப்படும் தாக்குதல் என தெரிவித்த ராகுல் காந்தி,  விசாரணை அமைப்புகளை வைத்து பாஜக அரசு ஜனநாயகம் மீது தாக்குதல் நடத்தியுள்ளது என்று கடுமையாக சாடினார். வருகிற நாடாளுமன்ற தேர்தலில்  இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்று ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்