48 மணி நேரத்தில் உருவெடுக்கும் புயல்: தமிழகத்திற்கு ஆபத்தா?
வியாழன், 14 மே 2020 (16:56 IST)
வருகின்ற 16 ஆம் தேதி புயல் உருவெடுக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்னும் இரண்டு நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அது மாற இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தின் கடற்கரையோர மாவட்டங்கள் மற்றும் சில பகுதிகளில் மிதமான மழை முதல் பல இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுபெற்றால் அதற்கு “ஆம்பன்” என பெயரிடப்படும் என கூறப்பட்டது. அதன்படி தற்போது அந்தமான் கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலைகொண்டுள்ளது என தகவ்ல் வெளியாகியுள்ளது.
மேலும், வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும். மேலும் வருகின்ற 16 ஆம் தேதி இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக உருவெடுக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.