மோடி - கருணாநிதி சந்திப்பு: அவசரமாக நாடு திரும்பினார் மு.க.ஸ்டாலின்

திங்கள், 6 நவம்பர் 2017 (11:41 IST)
சென்னை வந்துள்ள பிரதமர் மோடி இன்று பகல் 12.30 மணிக்கு திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கவுள்ள நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு பயணத்தை பாதியில் முடித்துகொண்டு நாடு திரும்பினார்



 
 
மோடி-கருணாநிதி சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுவதால் இந்த சந்திப்பு குறித்து கேள்விப்பட்ட மு.க.ஸ்டாலின் வெளிநாட்டில் இருந்து சற்றுமுன் சென்னை திரும்பினார். பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க மு.க.ஸ்டாலின் ஏற்பாடு செய்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. 
 
முன்னதாக மு.க.ஸ்டாலின் ஷார்ஜாவில் நடைபெற்ற புத்தக கண்காட்சியில் கலந்து கொண்ட பின்னர் லண்டனுக்கு சென்றிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்