சென்னையில் 1 லட்சம் மரக்கன்று நடும் திட்டம் !!

சனி, 7 ஆகஸ்ட் 2021 (12:20 IST)
கருணாநிதி நினைவு நாளை முன்னிட்டு சென்னையில் 1 லட்சம் மரக்கன்று நடும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

 
முன்னாள் முதல்வரும் முன்னாள் திமுக தலைவருமான மு கருணாநிதி அவர்களின் மூன்றாவது ஆண்டு நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து திமுக தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் கலைஞரை நினைவைப் போற்றியும் அவரின் அரிய சாதனைகளை எடுத்துக் கூறியும் அவர் நினைவைப் போற்றுகின்றனர்.
 
இந்நிலையில் சென்னையில் 1 லட்சம் மரக்கன்று நடும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் மரக்கன்று திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்