தியாகராஜர் பாகவதரின் பேரன் சாய்ராம் நேற்று முன்தினம் தலைமை செயலகம் வந்திருந்தார். அவர் முதல்வரை தனி பிரிவில் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார். அதில், எங்களது குடும்பம் வறுமையில் சிக்கி தவிப்பதாகவும், வாடகை கொடுக்க கூட பணம் இல்லாமல் கஷ்டப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி, எம்.கே.தியாகராஜர் பாகவதர் பேரனுக்கு அரசு சார்பில் குறைந்த வாடகையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் வீடு ஒன்றினை ஒதுக்கித் தரவும் மற்றும் ரூ.5 லட்சம் நிதியுதவியையும் வழங்க மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.