ஏற்கனவே அனுமதித்துள்ள 4 மாவட்டங்களுடன் கூடுதலாக 23 மாவட்டங்கள் என மொத்தம் 27 மாவட்டங்களில் பேருந்து சேவை துவங்கியுள்ளது. மேலும், வழிபாட்டுத்தலங்களும் திறக்கப்பட்டுள்ளது. இது போதாதென்று சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வணிக வளாகங்களை திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதோடு, 23 மாவட்டங்களில் துணிக்கடைகள், நகைக்கடைகளை திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஏசி இல்லாமல் காலை 9 முதல் இரவு 7 மணி வரை 50% வாடிக்கையாளர்களுடன் கடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
27 மாவட்டங்களில் உடற்பயிற்சி கூடங்கள் திறக்கப்பட்டுள்ளன. திருமணம் சார்ந்த பயணத்திற்கு இ-பாஸ் அல்லது இ-பதிவு தேவையில்லை. இம்மாவட்டங்களில் அருங்காட்சியகங்கள், தொல்லியல் சின்னங்கள், அகழ் வைப்பகங்கள் காலை 10 மணி முதல் மாலை 5 வரை திறந்திருக்கும்.