இந்நிலையில் சென்னையில் குப்பை கொட்டுவதற்கு கட்டணம் வசூலிப்பது காலவரம்பின்றி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து மு.க.ஸ்டாலின் இது குறித்து விமர்சித்துள்ளார். அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
மின் வாரியப் பணிகளைத் தனியாருக்கு ஒப்படைப்பதை எதிர்த்துப் போராடுவோம் என்றேன். வாபஸ் பெற்றார் அமைச்சர் திரு. தங்கமணி. 'குப்பை கொட்டவும் வரி' என்ற அறிவிப்பை ரத்து செய்யாவிட்டால், கழக ஆட்சி வந்து செய்யும் என்றேன். வாபஸ் பெற்றார் அமைச்சர் திரு. எஸ்.பி.வேலுமணி! அறிவிப்பதற்கு முன் யோசிக்கவே மாட்டீர்களா? எண்ணித்துணிக கருமம் என அதிமுக அமைச்சர்களைக் கேட்டுக் கொள்கிறேன்! என பதிவிட்டுள்ளார்.