கோபாலபுரத்தில் மு.க.அழகிரி... அரசியலா? அன்பா?

வியாழன், 24 டிசம்பர் 2020 (10:42 IST)
சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்திற்கு திமுகவில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ள மு.க.அழகிரி சென்றுள்ளார். 
 
சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்திற்கு மு.க.அழகிரி இன்று வந்தற்கு அரசியல் காரணங்கள் ஏதும் இருக்கும் என கூறப்பட்ட நிலையில் அங்கு வசித்து வரும் தனது தாயார் தயாளு அம்மாளின் உடல்நிலை குறித்து தெரிந்துக்கொண்டு அவரை காண மட்டுமே வந்துள்ளார் என தெரியவந்துள்ளது.  
 
2021 ஆம் ஆண்டு சட்டச்சபை தேர்தலில் தனது பங்கு இருக்கும் என கூறிய அழகிரி அரசியல் ஏதும் பேசாமல் தாயின் உடல்நிலையை மட்டும் விசாரித்து சென்றுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்