சென்னை தீவுத்திடலில், இன்று, தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 48 ஆவது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மேலும், அரசுத்துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை பார்வையிட்டு, சிறப்பான முறையில் அரங்குகளை அமைத்திருந்த, சிறைத்துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, தீயணைப்புத்துறை ஆகிய துறைகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினோம்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன், அமைச்சர் சேகர் பாபு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.