கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளில் தண்ணீர் இருந்தும் தமிழகத்திற்கு திறந்து விட மறுப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில் காவிரி விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க அமைச்சர் துரைமுருகன் சட்ட வல்லுநர்களுடன் டெல்லியில் ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.