ஜாமீனில் வெளிவந்த ரவுடி; துள்ள துடிக்க கொன்ற கும்பல்! – சோழவந்தானில் அதிர்ச்சி!

வெள்ளி, 1 ஜூலை 2022 (09:19 IST)
கொலை, கொள்ளை வழக்குகளில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த ரவுடி சில மணி நேரங்களில் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ரவுடி குண்டார் என்றழைக்கப்படும் சக்திவேல். அப்பகுதியில் பிரபல ரவுடியான சக்திவேல் மீது பல்வேறு கொலை, கொள்ளை, வழிபறி குற்ற வழக்குகள் உள்ளது. கடந்த ஆண்டு ஒரு கொலை வழக்கில் கைதான சக்திவேல் ஜாமீனுக்கு விண்ணப்பித்திருந்தார்.

நேற்று மதியம் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் வெளியே வந்த அவர் தனது பைக்கில் சோழவந்தான் அருகே சென்றுக் கொண்டிருந்துள்ளார். அப்போது பைக்கில் அவரை பின் தொடர்ந்த கும்பல் ஒன்று அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது. இந்த சம்பவத்தில் சக்திவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சக்திவேலின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ள போலீஸார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பல கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய சக்திவேலால் பாதிக்கப்பட்ட யாரேனும் இதை செய்திருக்கலாம் என கூறப்படும் நிலையில் கொலை செய்த ஆசாமிகளை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்