முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்! – மதுரையில் அமல்!

செவ்வாய், 28 ஜூன் 2022 (09:38 IST)
தமிழ்நாட்டில் நேற்று முதலாக முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் மதுரையில் அபராதம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்த நிலையில் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளி பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த சில காலமாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன.

நீண்ட நாட்களுக்கு பின் தமிழ்நாட்டின் கொரோனா பாதிப்பு 1,500ஐ நெருங்கியுள்ளது. இதனால் மீண்டும் கொரோனா விதிமுறைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி நேற்று முதல் தமிழ்நாடு முழுவதும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனாலும் நேற்று நேரடியாக மக்களுக்கு அபராதம் விதிக்காமல் மாஸ்க் அணியும்படி அறிவுறுத்தப்பட்டு மட்டுமே வந்தது. இந்நிலையில் இன்று முதல் மாஸ்க் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படுவதாக மதுரை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும் பல நகராட்சி, மாநகராட்சிகளும் மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்