இதனிடையே புலியை வேட்டையாடி பிடிக்க கூடாது என தொடரப்பட்ட வழக்கின் விசாரணை இன்று வந்தது. அப்போது நீதிபதிகள், சுற்றித்திரியும் அந்த புலி ஆட்கொல்லி புலியாக இல்லாமல் கூட இருக்கலாம். எனவே அதை உடனடியாக கொல்ல முயற்சிக்க வேண்டாம் என அறிவுறுத்தினர்.
மேலும், புலியின் நடவடிக்கை கண்காணித்து அதை பிடித்த பிறகு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை பிடிக்கும்போது மற்ற விலங்குகளுக்கு எந்த இடையூறும் ஏற்படுத்த கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளனர்.