இதைத் தொடர்ந்து, மதிமுகவின் 31-ம் ஆண்டு தொடக்க விழாவையும், மக்களவைத் தேர்தல் வெற்றியையும் கொண்டாடும் வகையில் கட்சிக் கொடியேற்று விழா நிகழ்ச்சிகளை ஜூலை 15-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடத்த வேண்டும் என கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கேட்டுக் கொண்டிருந்தார். அதன்படி, நிர்வாகிகள் கொடியேற்றும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கட்சியின் பொதுக்குழு தொடர்பான அறிவிப்பை வைகோ இன்று வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், மதிமுகவின் 30-வது பொதுக்குழு ஆகஸ்ட் 4-ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை, அண்ணாநகர் 3-வது அவென்யூ-நியூ ஆவடி சாலை சந்திப்பில் இருக்கும் விஜய் ஸ்ரீ மஹாலில் கட்சியின் அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜூனராஜ் தலைமையில் நடைபெறும் எனத் அறிவித்துள்ளார்.