திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதியில் பாலிடெக்னிக் மூன்றாமாண்டு படித்து வருபவர் அஜித். இவரும் அதே பகுதியில் 11ம் வகுப்பு படித்து வரும் பெண்ணும் நீண்ட நாட்களாக காதலில் இருந்து வந்துள்ளனர். தனிமையில் சந்திக்க விரும்பிய இருவரும் குளக்கரை ஒன்றில் யாருக்கும் தெரியாமல் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது அந்த பெண்ணின் பக்கத்து வீட்டில் உள்ள 8 வயது சிறுவன் எதேச்சையாக அந்த பக்கம் வந்தபோது அவர்கள் நெருக்கமாக இருப்பதை பார்த்திருக்கிறான்.
உண்மையை வீட்டில் சொல்லி விடுவானோ என பதறிய காதல் ஜோடி சிறுவனை உடைந்து கிடந்த மதுப்பாட்டிலால் குத்தி கொன்றுவிட்டு தப்பியுள்ளனர். குளக்கரையில் பிணமாக கிடந்த சிறுவனை மீட்டு பிரேத பரிசோதனை செய்த போலீஸார், சந்தேகத்தின் பேரில் அஜித்திடம் விசாரணை மேற்கொண்டத்தில் மேற்கண்ட சம்பவங்களை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். அதை தொடர்ந்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கொலைக்கு உதவியாக இருந்த பெண் 17 வயது மைனர் என்பதால் கூர்நோக்கு இல்லத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலீஸார் தெரிவித்துள்ளனர்.