ஒலி வடிவில் பாடம் - தமிழக அரசு மாணவர்களுக்காக புது முயற்சி!
திங்கள், 5 ஜூலை 2021 (12:29 IST)
10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக இன்று முதல் ஒலி வடிவில் அகில இந்திய வானொலியில் பாடங்கள் ஒலிபரப்பப்பட உள்ளதாக தகவல்.
கொரோனா காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் உள்ள தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளில் ஆன்லைன் வாயிலாகவே மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்கப்பட்டது. தற்போதும் அப்படியே தொடர்கிறது.
இந்நிலையில் தற்போது தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியில் மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கியுள்ளது. தினமும் காலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை ஒவ்வொரு வகுப்புக்கான பாடங்கள் நடத்தப்பட உள்ளன. அதற்கான அட்டவணையும் வெளியிடப்பட்டன.
இதனைத்தொடர்ந்து தற்போது பள்ளிக்கல்வித் துறை, பொதுத் தேர்வு எழுத உள்ள 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக இன்று முதல் 31 ஆம் தேதி வரை ஒலி வடிவில் அகில இந்திய வானொலியில் பாடங்கள் ஒலிபரப்பப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.
திங்கள் - வெள்ளி வரை நாள் ஒன்றுக்கு 20 நிமிடங்கள் வீதம் 4 பிரிவுகளாக 80 நிமிடங்கள் பாடங்கள் ஒளிபரப்பப்பட உள்ளது. முதல் 20 நிமிடம் 10 ஆம் வகுப்பு பாடங்களும் அடுத்ததாக 3 20 நிமிடங்களுக்கு 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடங்கள் ஒலி வடிவில் ஒலிபரப்பச் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.