கே.பி.முனுசாமி திமுக கைக்கூலி: ஓபிஎஸ் ஆதரவாளர் பகீர் தகவல்!
சனி, 9 ஜூலை 2022 (12:36 IST)
கேபி முனுசாமி திமுகவின் கைக்கூலி என அதிமுகவின் ஓபிஎஸ் தரப்பு கோவை செல்வராஜ் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
அதிமுகவின் தற்போது ஓபிஎஸ் ஈபிஎஸ் சண்டை உச்சகட்டத்தில் இருக்கும் நிலையில் ஈபிஎஸ் தரப்பில் இருந்து கேபி முனுசாமி, ஓபிஎஸ் அவர்களை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்
குறிப்பாக இன்று அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது ஓபிஎஸ் உடன் இவ்வளவு நாள் பயணம் செய்தது வேதனை தருகிறது என்றும் ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளார்
ஜனநாயக கட்சி செயல்பாடுகள் இருக்கும் என்று கூறிய அவர் கொடநாடு விவகாரத்தில் தனது மகனையே அம்பாக இது ஓபிஎஸ் பேச வைக்கிறார் என்றும் அவர் தெரிவித்தார்
ஓபிஎஸ் திமுக வுடன் இணைந்து செயல்படுவது போன்ற சூழல் வந்ததால்தான் அவரிடம் இருந்து விலகினேன் என்றும், அவருடன் இத்தனை ஆண்டுகள் பயணம் செய்து வேதனையாக இருக்கிறது என்றும் எடப்பாடி பழனிச்சாமி தலைமை பொறுப்புக்கு வர இருக்கிறார் என்றும் கூறினார்
இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் பேசியபோது கேபி முனுசாமி திமுகவின் கைக்கூலி என்றும் திமுக அமைச்சர் ஒருவருக்கு நெருக்கமானவர் என்றும் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது