கொடைக்கானல் காட்டுப்பகுதியில் தீ! – தீயணைக்கும் பணி தீவிரம்!
வெள்ளி, 11 மார்ச் 2022 (15:22 IST)
கொடைக்கானல் காட்டுப்பகுதியில் பெரிய அளவில் காட்டுத்தீ பற்றி எரிவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் மலைவாச சுற்றுலா தளமாக கொடைக்கானல் உள்ளது. இந்நிலையில் கொடைக்கானல் அருகே பெருமாள் மலை அருகே உள்ள காட்டுப்பகுதியில் திடீட் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் தீ பற்றி எரிவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திடீர் காட்டுத்தீ ஏற்பட்டது பெருமாள் மலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.