தமிழகம் வழியாக செல்லும் கேரள ரயில்கள் நிறுத்தமா?

செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (08:28 IST)
கேரளாவில் படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து தமிழகம் வழியாக செல்லும் கேரளா ரயில்களை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது
 
கேரளாவில் இருந்து வரும் ரயில் பயணிகளை தமிழக ரயில்வே நிலையத்தில் கண்காணிக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருவதாக கூறப்படுகிறது. ரயில்வே நிலையத்தில் குறைந்த அளவில் ஊழியர்கள் மட்டுமே இருப்பதால் கேரளாவிலிருந்து வரும் ரயில் பயணிகள் அனைவரிடமும் பரிசோதனை செய்வது சவாலாக இருக்கிறது என்று ரயில்வே துறை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர் 
 
இந்த நிலையில் தமிழக மற்றும் கேரள மாநில அரசுகள் இது குறித்து ஆய்வு செய்து தமிழகம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அல்லது தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில் நிறுத்தாமல் செல்ல வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டு வருகின்றன
 
தமிழக அரசு தங்கள் மாநில எல்லைக்குள் உள்ள ரயில் நிலையங்களில் ரயிலை நிறுத்தாமல் செல்ல வேண்டும் என்று தெரிவித்தால் அங்கு ஸ்டாப்பிங் அளிக்கப்படாது என்றும் தமிழக அரசின் அறிவிப்பை பொருத்தே எங்கள் செயல்பாடு இருக்கும் என்றும் ரயில் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்