கருணாநிதியின் செயலாளர் சண்முகநாதனின் 80வது பிறந்தநாள்: நேரில் வாழ்த்திய மு.க. ஸ்டாலின்!

வியாழன், 16 செப்டம்பர் 2021 (14:51 IST)
கருணாநிதியின் செயலாளர் சண்முகநாதனின் 80வது பிறந்தநாள்
முன்னாள் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு கருணாநிதி அவர்களிடம் பல ஆண்டுகளாக செயலாளராக இருந்து வந்தவர் சண்முகநாதன் என்பது அனைவரும் அறிந்ததே
 
சண்முகநாதன் மீது கருணாநிதி மட்டுமின்றி அவரது குடும்பத்தினர் மிகவும் பாசத்துடன் இருந்தனர். சமீபத்தில் உடல்நலக்குறைவால் சண்முகநாதன் பாதிக்கப்படபோது கருணாநிதியின் குடும்பத்தினர் அனைவரும் அவரை உடல் நலம் விசாரித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சண்முகநாதன் அவர்கள் இன்று தனது 80வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்