இந்த நிலையில் சென்னையில் சிகிச்சை பெற்று வரும் அரவிந்தனின் உடல்நிலை குறித்து விசாரிக்க தெலுங்கானா மற்றும் புதுவை மாநில கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் நேரில் சென்றார். அவருடன் அவர்கள் கணவர் டாக்டர் சௌந்தரராஜன் அவர்களும் சென்றார். அரவிந்தன் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்ட தமிழிசை சில ஆலோசனை வழங்கியதாக தெரிகிறது. மேலும் கனிமொழிக்கு அவர் ஆறுதல் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன