சமீபத்தில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகள் கூட்டம் கூடியது என்பதும் இந்தக் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் வரும் தேர்தலில் 200 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்பது நமது குறிக்கோளாக இருக்க வேண்டும் என்றும், மிஷன் 200 என்பதை அனைவரும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்
இந்த நிலையில் கமல்ஹாசன் அவர்களிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேட்டபோது அவர்கள் 200 என்று கூறியது தொகுதிகளாக இருக்காது என்றும், அவர்கள் தங்களுடன் இருப்பவர்களுக்கு கொடுக்கும் தொகையாக இருக்கும் என்று கிண்டலுடன் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது