நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதன் காரணமாக ஏழை எளிய மக்கள் பசியால் வாடுவதாகவும், பசியால் வாழும் சாமானியன் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ள வேண்டாம் என்றும் சாமானியன் சாபமிட்டால் எந்த அரசு கவிழும் என்றும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கமலஹாசன் அவர்கள் தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார்
இந்த நிலையில் சில மணி நேரங்களுக்கு முன்னர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பொதுமக்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தார். இலவச அரிசி, பருப்பு, எண்ணெய் உள்பட பல சலுகைகளை அறிவித்ததன் மூலம் வேலை இன்றி வருமானம் இன்றி இருக்கும் ஏழை எளிய மக்கள் பயன் அடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது