Free Netflix-னு மெசேஜ் வந்துச்சா..? அப்போ இது உங்களுக்கு தான்!!

வியாழன், 26 மார்ச் 2020 (18:03 IST)
நெட்ஃபிக்ஸ் இலவச சந்த வழங்கியுள்ளதாக வெளியாகி வரும் மெசேஜ் குறித்து நெட்ஃபிக்ஸ் பதில் அளித்துள்ளார். 
 
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,00,000 ஐ நெருங்கியுள்ளது. இந்தியாவில் 600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். 
 
தமிழகத்தில் இன்று வரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆக உள்ளது. வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனால் வீட்டுக்குள் முடங்கியுள்ள நிலையில் பொழுதுபோக்கிற்காக மக்கள் இணையத்த அதிகமாகப் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக நெட்ஃபிக்ஸ், அமேசான் ப்ரைம் போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த தளங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. 
 
இந்நிலையில் இதை பயன்படுத்தி போலி மெசேஜ் ஒன்று வலம் வருகிறது. அதில் நெட்ஃபிக்ஸ் இலவச சந்த வழங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், இது முற்றிலும் பொய்யானது என நெட்ஃபிக்ஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 
 
அவர் கூறியதாவது, நெட்பிலிக்ஸ் நிறுவனம் எந்த விதமான இலவச சந்தாவையும் அறிவிக்கவில்லை. இது முற்றிலும் பொய்யானது என தெரிவித்துள்ளார். 
 
அதே சமயம் அமேசான் ப்ரைம், ஒரே நேரத்தில் பலரும் இணையத்தை பயன்படுத்துவதால் ஹேங்க் ஆகாமல் இருக்க, வாடிக்கையாளர்களுக்கு ஏப்ரல் 14 வரை எச்டி தர வீடியோக்களைப் பார்க்க முடியாது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்