மதுரையில் நாளை அதிமுக மாநாடு பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இந்த மாநாடு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியபோது, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, அதிமுக உடைந்தது, கட்சி சிதறுண்டது, கட்சியே இல்லை என கூறியதற்கு பேரடியாக இந்த மாநாடு அமையும்;
மதுரை எழுச்சி மாநாடு நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும், அதிமுகவின் இந்த மாநாடு போல கடந்த காலத்தில் யாரும் மாநாடு நடத்தியதில்லை, எதிர்காலத்திலும் யாரும் நடத்தப் போவதும் இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
மேலும் மதுரையில் நாளை நடைபெறும் அதிமுக மாநாட்டில் பங்கேற்க செல்லும் நிர்வாகிகள் சென்னை ராயபுரத்தில் இருந்து நூற்றுக்கணக்கான நிர்வாகிகள், தொண்டர்கள் பேருந்துகளில் பயணம் செய்தனர். இந்த பயணத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பயணத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்