தினகரன் மூட்டைப்பூச்சி ; விரைவில் நசுக்கி விடுவோம் : ஜெயக்குமார் அதிரடி

புதன், 27 டிசம்பர் 2017 (12:17 IST)
தினகரனுக்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம் என அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

 
சென்னை ஆர்.கே.நகரில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட தினகரன், அதிமுக வேட்பாளர் மதுசூதனனை விட 40,707 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இது, எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ் தரப்பினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.  
 
அதேபோல், இந்த தோல்வியை அடுத்து, நிர்வாகிகளின் ஆதரவும், மக்களின் ஆதரவும் தங்கள் பக்கம் இருப்பதாக தினகரன் தரப்பு கூறி வருகிறது. மேலும், எடப்பாடி பக்கம் உள்ள சில அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் தினகரன் பக்கம் தாவி விடுவார்கள் எனவும் கூறப்படுகிறது. ஆனால், எடப்பாடி தரப்பி அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில் இன்று அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தினகரன் சட்டசபைக்கு வர இருக்கிறார். அவரை எப்படி எதிர்கொள்வீர்கள்? என ஒரு நிருபர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஜெயக்குமார் “மூட்டைப் பூச்சிக்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம்.  மூட்டைப் பூச்சை நசுக்கி விடுவோம்” என அவர் தெரிவித்தார்.

தினகரனை மூட்டைப்பூச்சு என ஜெயக்குமார் விமர்சித்திருப்பது தினகரன் ஆதரவாளர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்