கிறிஸ்டி நிறுவனத்தில் ரூ.4 கோடி பறிமுதல் : வருமான வரித்துறையினர் அதிரடி

வெள்ளி, 6 ஜூலை 2018 (16:58 IST)
தமிழக அரசு பள்ளிகளுக்கு முட்டை வினியோகம் செய்யும் கிறிஸ்டி நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி சிக்கியுள்ளது.

 
தமிழக அரசு சத்துணவு திட்டத்திற்கு உணவு பொருட்கள் வழங்கும் கிறிஸ்டி நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, தமிழகம் மற்றும் கர்நாடகாவில் உள்ள கிறிஸ்டி நிறுவனத்திற்கு சொந்தமான 76 இடங்களில் வருமான வரித்துறையின் நேற்று சோதனையை தொடங்கினர். கிறிஸ்டி நிறுவன உரிமையாளர் வீடு, உறவினர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் 45க்கும் மேற்பட்ட அதிகாரிகள் 15 குழுக்களாக பிரிந்து சோதனை மேற்கொண்டனர்.
 
இரண்டாவது நாளாக இன்றும் சோதனை தொடங்கியது. அதில், பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கணக்கில் வராத பணமாக ரூ.4 கோடியை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். அதேபோல், வெளிநாட்டில் பணம் முதலீடு செய்யப்பட்டதற்கான ஆவணங்களும் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்