வீட்டிற்குள் சென்ற ஜெயராமன் மின் தொகை ரூ.500 வருகிறது. ஆனால், நீங்கள் ரூ.100 கொடுத்தால் போதும். இனிமேல் உங்களுக்கு மிகவும் குறைவாகவே மின் தொகை போட்டுத்தருவேன் என ஆசை வார்த்தை பேசியுள்ளார். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த அப்பெண் சரியான தொகையை பதிவு செய்யும் படி கூறியுள்ளார்.
அப்போது திடீரெனெ அப்பெண்ணை அணைத்து ஜெயராமன் முத்தம் கொடுத்துள்ளார். மேலும், பாலியல் அத்துமீறல்களிலும் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியைடைந்த அப்பெண் அவரை வலுக்கட்டாயமாக வீட்டிற்கு வெளியே தள்ளிவிட்டு, தனது கணவருக்கு தகவல் கொடுத்தார்.