கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்தும் இந்து கடவுள் முருகன் குறித்து அவதூறு பரப்பும் வகையில் வீடியோ வெளியிட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைக் கண்டித்து இந்து அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் அந்த சேனலை சேர்ந்த சுரேந்திரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால் அந்த புகைப்படங்களில் ஒன்றில் கூட முருகன் புகைப்படம் பூஜையறையில் இல்லை. சமையலறையிலும், ஹாலிலும் புகைப்படங்களை வைத்து வழிபடுவது போல புகைப்படம் எடுத்து பதிவேற்றியுள்ளனர். அதனால் இதெல்லாம் செட் அப் என்றும் ஏன் உங்கள் வீட்டு பூஜையறையில் முருகன் படத்தை வைத்து வழிபட மாட்டீர்களா என்ற கேள்வியும் சமூகவலைதளங்களில் எழும்பியுள்ளது.